undefined

பயணிகள் பீதி...  தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

 தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பள்ளிகள், விமான நிலையங்கள் உட்பட பல முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.  போலீசார் சோதனை செய்து பார்த்தால் மிரட்டல்கள் வெறும் புரளி என தெரியவருகிறது. பெரும்பாலான மிரட்டல்கள் விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமெயில் மூலமாக விடுக்கப்படுகிறது.

இதனால், சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பதிலும் கடும் சவால் நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று தாம்பரம் ரயில் நிலையத்திற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தாம்பரம் நடைமேடை முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  போலீசார் திடீர்  சோதனை நடத்தி  வருவதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளிடையே  அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!