undefined

 பரபரப்பு... ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 
 

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக  நேற்று அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பிய நிலையில் அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள்  அவரை வழி  அனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சென்ற எமிரேட்ஸ் விமானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து  அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட விமானத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.  மேலும் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்ததாக போலியாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை