undefined

   பரபரப்பு... ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 


 
இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர் சேவை எண்ணில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெலிபோன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை  காவல் துறையினர் தேடி வருகின்றனர். மிரட்டல் விடுத்த மர்ம நபர்  தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமைச் செயல் அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

2008 ம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு மும்பையில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்தியாவில் நடத்தப்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.  நேற்று காலை 11 மணிக்கு ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைப்பு வந்த நிலையில், ரிசர்வ் வங்கியை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 தன்னை தடை செய்யப்பட்ட ஒரு குழுவின் தலைமைச் செயல் அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், மிரட்டல் விடுப்பதற்கு முன்பு அந்த நபர் ஒரு பாடல் பாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!