அசாமில் குண்டு வெடித்த விவகாரம்.. உல்ஃபா தீவிரவாதி அதிரடியாக கைது!
அசாமின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்ட ஐஇடி வெடிகுண்டுகள் வெடித்த வழக்கில், ஐக்கிய விடுதலை முன்னணியின் (உல்ஃபா- ஐ) முக்கிய குற்றவாளியை NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) கைது செய்துள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த கவுதம் பருவா என்ற கிரீஷ் பருவா என்ற நபரை என்ஐஏ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் சுதந்திர தின விழாவுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான உல்ஃபாவால் அசாம் முழுவதும் வெடிமருந்துகளை வைத்தது தொடர்பாக செப்டம்பர் மாதம் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் ULFA-I இன் உறுப்பினர். அமைப்பின் உயர்மட்டத் தலைமையின் உத்தரவின் பேரில், அசாமின் வடக்கு லக்கிம்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் அவர் ஐஇடி வெடிகுண்டுகள் நிறுவியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்தேக நபர் பெங்களூருவில் பதுங்கியிருந்த நிலையில், செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அவரை சிறையில் அடைத்த நீதிமன்றம், அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!