நெருங்கும் பொதுத்தேர்தல்.. பாகிஸ்தானில் அடுத்தடுத்து 10 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்.!

 

பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வெடிகுண்டு, கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குட்டா, குஸ்டார், தர்பத் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



இந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் துணை ஆணையர் அலுவலகங்களை குறிவைத்து சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 10 குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 8 கிலோ வெடிபொருட்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.



வெடிகுண்டு தாக்குதலில் 84 வயது முதியவர் உயிரிழந்தார். போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களும் காயமடைந்தனர். தேர்தல் பிரசாரம் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் இல்லாத போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் தாக்குதலுக்கான காரணங்கள் தெரியவில்லை.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க