நடுக்கடலில் கவிழ்ந்த படகு.. 20 பேர் பலி.. பலர் மாயம்!
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் லோகோனெட்-சாரி பகுதியில் உள்ள டாராக் தீவில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற படகு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் நீரில் மூழ்கியவர்களைத் தேடி வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதிக சுமை ஏற்றுதல், முறையற்ற செயற்பாடுகள் மற்றும் கடுமையான காலநிலை காரணமாக இப்பகுதியில் படகு விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!