undefined

  மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் பாஜக கூட்டணி முன்னிலை!

 
 


 
 இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று நவம்பர் 23ம் தேதி காலை 8 மணி முதல்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்  தற்போது வரை மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்:
பாஜக மகாயுதி அணி - 210
காங். மகாவிகாஸ் அகாடி - 65
(மொத்த இடங்கள் - 288 / பெரும்பான்மைக்கு - 145)

ஜார்க்கண்ட் முன்னிலை நிலவரம்:
பாஜக கூட்டணி - 46
ஜெஎம்எம் + காங். அணி - 32
மொத்த இடங்கள் - 81 / பெரும்பான்மைக்கு 41)

மகாயுதி vs மகா விகாஸ் அகாடி: மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலவரபட்டி மொத்தம் உள்ள  288 சட்டப்பேரவை தொகுதிகளில் 210-ல் மகாயுதி கூட்டணியும், 65-ல் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன.


ஜெஎம்எம் + காங்கிரஸ் vs பாஜக கூட்டணி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இங்கு மொத்தம் உள்ள  81 தொகுதிகளில் பாஜக கூட்டணி 46 இடங்களிலும், ஆளும் ஜெஎம்எம் தலைமையிலான கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!