undefined

 தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு... உடனடி அமல்!

 

 தமிழகம் முழுவதும்  உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உடனடியாக பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்படும் என  உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், அலுவலர்கள்  தாமதமாக வருகை தருவதும், எவ்வித அனுமதியும் பெறாமல், முன்கூட்டியே பல்கலைக்கழகத்தில் இருந்து  கிளம்புவதாகவும் பரவலாக புகார் எழுந்துள்ளது.


இதுபோன்ற செயல்பாடுகளால் பல்கலை வளாகத்தில் பல்வேறு விரும்பத்தகாத செயல்பாடுகள் நடந்து வருகின்றன.அதே போல் அறிமுகம் இல்லாத  வெளிநபர்கள் வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர். இதுபோன்ற கட்டுப்பாடு இல்லாத காரணங்களால் மாணவர்கள் போராட்டம், ஆசிரியர் – மாணவர்களிடையே சுமூக உறவு பாதிக்கிறது.


இதனை தவிர்க்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்  பல்கலைக்கழகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது, பணி முடிந்து வெளியேறும் போதும் வருகைப் பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!