undefined

இன்று முதல் பாராளுமன்றத்தில்  டிஜிட்டல் வருகை பதிவேடு!  

 


 
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்று நவம்பர் 25ம் தேதி  தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில்  மக்களவை உறுப்பினர்கள் மின்னணு டேப் மூலம் வருகையைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் நாடாளுமன்றத்தை காகிதமற்ற முறைக்கு மாற்ற இதற்கென மின்னணு டேப்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  


"பழைய முறையிலான வருகைப் பதிவேட்டு முறையும் கவுண்டர்களில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், உறுப்பினர்கள் மின்னணு டேப் மூலம் தங்களது வருகையைப் பதிவுசெய்து காகிதமற்ற நாடாளுமன்றத்தை உருவாக்க உதவுமாறு அறிவுறுத்தப்படுகிறது" என மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர்கள் டேப் மெனுவில்  தங்களது பெயர்களைத் தேர்ந்தெடுத்து டிஜிட்டல் பேனா மூலம் கையெழுத்திட்டு, அதனை சமர்ப்பித்தால் வருகைப் பதிவு செய்யப்படும் எனவும்  இதற்கென தொழில்நுட்ப உதவிக்காக தேசிய தகவல் மையத்தின் பொறியாளர்கள் ஒவ்வொரு கவுண்டர்களிலும் இருப்பார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் கூடும் போது, உறுப்பினர்கள் தங்களின் தினசரி உதவித்தொகையைப் பெறுவதற்கு பதிவேட்டில் தங்களின் வருகையை குறிப்பிட்டிருக்க வேண்டும். இதற்கு முன்னர் மொபைல் ஆப் வசதி மூலம் வருகைப் பதிவு செய்யப்பட்டது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!