undefined

பைக் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து... இளைஞர் உயிரிழப்பு!

 

தூத்துக்குடி மாவட்டம் எப்சிஐ குடோன் அருகில் பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி அருகில் உள்ள காசிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரிசெல்வம் (25). இவர் நேற்று தனது பைக்கில் தூத்துக்குடி எப்சிஐ குடோன் அருகேசென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ ஒன்று இவரது பைக் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மாரிசெல்வத்தை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாரிச்செல்வம் இன்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த தூத்துக்குடி 3வது மைல் 2வது தெருவை சேர்ந்த காந்தி மகன் கலைச்செல்வன் (22) என்பவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!