பிக்பாஸ் சீசன் 8.. வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கு இரு பிரபலம்.. யார் தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சி மூன்று வாரங்களை நிறைவு செய்து நான்காவது வாரத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த கட்டத்தில் 3 எலிமேனிஷன் நடந்துள்ளன. இதில் இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். ஒரு பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி தொடங்கும் போது 18 போட்டியாளர்கள் இருந்தனர். போட்டியில் ஒன்பது ஆண்களும், ஒன்பது பெண்களும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் நாளை தீபாவளியன்று இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா. பெண்கள் சார்பில் அறிமுகமாகிறார். இவர் நடிகை லட்சுமியின் மகள். அதுபோல, ஆரம்பத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த அவர், பிறகு குணச்சித்திர வேடங்களிலும், மிரட்டலான கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
தற்போது சீரியல் மற்றும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களம் இறங்க உள்ளார். இவரை தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வரும் TSK அதாவது திருச்சி சரவண குமார் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய எபிசோடில் இருவரும் என்ட்ரி கொடுப்பார்கள் என்றும் ஏற்கனவே வைல்டு கார்டாக வந்த போட்டியாளர்கள் இறுதி வரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஏழாவது சீசனில் வைல்ட் கார்டாக வந்த அர்ச்சனா, நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார். அதேபோல் இந்த சீசனிலும் போட்டியாளர்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது. அப்படியானால், இந்த நிகழ்ச்சியில் வரும் ஐஸ்வர்யாவும், காமெடி கிங் என்று அழைக்கப்படும் டிஎஸ்கேவும் பங்கேற்கும் நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!