தேர்தலில் சறுக்கிய பிக்பாஸ் பிரபலம்.. வெறும் 155 ஓட்டை வாங்கிய தோல்வியடைந்த அவலம்!
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக முடிவடைந்தது. மகாயுதி (பாஜக ஷிண்டே சிவசேனா அஜித் பவார் என்சிபி) மற்றும் மகா விகாஸ் அகாடி (காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா ஷரத் பவார் என்சிபி) இடையே கடும் போட்டி நிலவியது.
தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்படி, பாஜக (மகாயுதி) கூட்டணி 224 இடங்களிலும், காங்கிரஸ் (மகா விகாஸ் அகாதி) 53 இடங்களிலும், மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
அஜாஸ் கான் வெர்சோவா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் போட்டியிட்டார். இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள அஜாஸ் கான், சட்டசபை தேர்தலில் வெறும் 155 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக சிவசேனா (உத்தவ் தாக்கரே) வேட்பாளர் ஹாரூன் கான் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!