undefined

பிக் பாஸ் 8 நியூ அப்டேட்.. களமிறங்கும் மக்கள் செல்வன்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

கடந்த 7 சீசன்களில் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை தமிழில் தொடங்கிய நாள் முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.  அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களும் உண்டு. தெலுங்கில் நாகார்ஜுனா, கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் மோகன்லால் என தென்னிந்திய பெரிய நிகழ்ச்சிகளை நட்சத்திர நடிகர்கள் தொகுத்து வழங்கினர்.

நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்ற கேள்வி எழுந்தது. நடிகர் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், சிம்பு, நயன்தாரா என பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், பிக் சீசன் 8 தொகுப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டது. அந்த வகையில் விஜய் டிவி தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆம் பிக் சீசன் 8 ஐ தொகுத்து வழங்குவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்காதது வருத்தம் தான் ஆனால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை