undefined

’விமானத்தில் கொடுக்கப்பட்ட சாண்ட்விச்சில் ஸ்க்ரூ’.. சாப்பிடும் போது ஷாக் ஆன பயணி..!

 

பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை வந்த பயணி ஒருவர் வெளியிட்ட தகவல் திடுக்கிட வைத்துள்ளது. அதாவது, விமானத்தின் போது வாங்கிய சாண்ட்விச்சில் இரும்பு திருகு இருந்ததை பார்த்து அந்த பயணி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அந்த பயணி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, கடந்த பிப்ரவரி 1ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இண்டிகோவில் பயணம் செய்த போது எனது சாண்ட்விச்சில் இரும்பு  திருகு இருந்தது. இண்டிகோவுடன் பேசுவதற்கு அடுத்த நாள் அவர்களைத் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் இண்டிகோ விமானத்தில் பயணித்த போது கொடுக்கப்பட்ட சாண்ட்விச்சில் திருகு இருந்தது. ஆனால் அதற்கு அவர்கள் தங்கள் நிறுவனம் தரப்பில் எதுவும் செய்ய முடியாது என்று பதிலளித்தனர். இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று பதவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்துள்ள பலர், அந்த உணவை குழந்தை அறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்ற கோணத்தில் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் நிறுவனத்தின் தலைவரை டேக் செய்து புகார் அளிக்க வேண்டும் என்றும் பலர் கூறியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்