undefined

பாகம்பிரியாள் வருஷாபிஷேகம்... வெள்ளி வாகனத்தில் வீதி உலா!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற பாகம்பிரியாள் உடணுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய  வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் பரிவார மூர்த்திகளுடன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடணுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய வருஷாபிஷேக விழா நேற்று  நடைபெற்றது.  இதை முன்னிட்டு காலை சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து இரவு பாகம்பிரியாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான் , சண்டிகேஸ்வரர், ஆகியோர்  பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்‌. அப்போது சிவன் கோவில் தலைமை பட்டர் செல்வம், சண்முகம் பட்டர், ஆகியோர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்தனர். 

பின்னர் சுவாமி அம்பாள் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாரதனைக்கு பின்பு வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல குழு தலைவர் கந்தசாமி, சிவன் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா