உஷார்... தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்! மிகக் கனமழை எச்சரிக்கை!

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ’ஆரஞ்சு’ எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதனால், அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதீங்க. மழைக்காலங்களில் மரத்தின் கீழே, பாழடைந்த கட்டிடங்களிலோ ஒதுங்கி நிற்காதீங்க. ரொம்ப ஜாக்கிரதையா, பத்திரமான இடத்தில் இருங்க. ஈர கைகளுடன் மின் இணைப்பை பயன்படுத்தாதீங்க. இடி இடிக்கும் சமயங்களில் கூடுமானவரை செல்போன்களைப் பயன்படுத்தாதீங்க. 

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!