வங்கக்கடலில் உருவாகும் ‘பெங்கால்’ புயல்... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 08. 30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
நாகைக்கு தெற்கு-தென் கிழக்கு பகுதியில் 630 கிலோ மீட்டர் தூரத்திலும், திரிகோணமலைக்கு தெற்கு-தென்கிழக்கில் 340 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 750 கிலோ மீட்டர் தெற்கு-தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்க கடலில் நாளை ஃபெங்கல் புயல் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் பெயர் சூட்டப்படவுள்ளது. ஃபெங்கல் புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழகத்தை நோக்கி நகரும். சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் எனவும் இதன் காரணமாக 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 நாளைக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!