undefined

முகவர்கள், மக்களிடம் இணக்கமாக இருங்க...   234 தொகுதி பார்வையாளர்களுக்கும்  முதல்வர் திடீர் உத்தரவு!

 


 தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது.  தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில்,  முன்னதாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில்,  துணை முதல்வர்,  உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 234 சட்டமன்ற தொகுதிக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளது.  இந்த 234 தொகுதி பார்வையாளர்களில் பெரும்பாலானோர் இளைஞரணியை சேர்ந்த புதியவர்கள் தான்.  இவர்களுடன் இன்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த தொகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசு நலத்திட்டங்களை மக்களிடம் தொகுதி  கொண்டுசெல்ல வேண்டும், தொகுதி முகவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டியது அவசியம் என்பது உட்பட பல  விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக  தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!