காற்றழுத்த தாழ்வுப்பகுதி... தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை தொடரும்!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 3ம் தேதி முதல் 2வது சுற்று கோடை மழை பெய்து வரும் நிலையில், தற்போது 3வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட இருக்கிறது.
அதன்படி தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. இது மிக மெதுவாக நகர்ந்து தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை ஏப்ரல் 8ம் தேதி முதல் மேலும் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கோடை மழை தொடங்கியதில் இருந்து இதுவரை 188 சதவீதம் இயல்பைவிட அதிகமாகவே தமிழ்நாட்டில் பெய்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மழை இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால், மழை அளவு மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. மழை ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், அடுத்த மழைக்கான வாய்ப்பு சற்று குறையும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கக் கூடும் என்ற மற்றொரு தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!