சூப்பர்... சோலார் பேனல் அமைக்க வங்கிக் கடன் உதவி! 

 


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ வங்கி. வாடிக்கையாளர்களின் வசதிகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைப்பதற்கு எஸ்பிஐ வங்கி கடன் உதவி வழங்கி வருகிறது.  அதன்படி PM சூர்யாகர் திட்டத்தின் கீழ் 10 KW திறன் வரை கடன் வழங்கப்படுகிறது.3KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ2 லட்சம் 3KW முதல் 10 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ6 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.  

MNRE/REC இணையதளத்தில் விண்ணப்பத்தாளர் பதிவு செய்வது மூலம் கடன் வழங்குவது வரை எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கடன் வாங்குபவர் 70 வயதை அடையும் முன்னர் கடனை கட்டி முடிக்க வேண்டும் என்பது தான் அடிப்படை. 65 வயது வரை இருக்கும் நபர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எனவும், 680க்கு மேல் சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!