undefined

 டிசம்பரில் 17 நாட்கள் வங்கி விடுமுறை... இப்பவே பணப்பரிவர்த்தனையை திட்டமிடுங்க!

 
 

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. நவம்பர் மாதம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் வங்கிகள் செயல்படும் நாட்கள், விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.  அதன்படி டிசம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி


டிசம்பர் 1 - ஞாயிற்றுக்கிழமை  
டிசம்பர் 3 - செவ்வாய்க் கிழமை (கோவா புனித பிரான்சிஸ் சேவியரின் திருநாள்) 
டிசம்பர் 8 - ஞாயிற்றுக்கிழமை 
டிசம்பர் 12 - வியாழக்கிழமை  (பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா  மேகாலயாவில் வங்கி விடுமுறை)
டிசம்பர் 14 - 2 வது சனிக்கிழமை


டிசம்பர் 15 - ஞாயிறு விடுமுறை
டிசம்பர் 18 - வியாழக்கிழமை (யூ சோசோ தோமின் நினைவு தினம்  மேகாலயாவில் வங்கி விடுமுறை).
டிசம்பர் 19 - வெள்ளிக்கிழமை (கோவா விடுதலை தினம்) 
டிசம்பர் 22 - ஞாயிறு விடுமுறை
டிசம்பர் 24 - செவ்வாய்க்கிழமை (கிறிஸ்துமஸ்   மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில்   வங்கி விடுமுறை).
டிசம்பர் 25 - புதன்கிழமை (கிறிஸ்துமஸ்) 
டிசம்பர் 26 - வியாழக்கிழமை  (மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை).
டிசம்பர் 27 - வெள்ளிக்கிழமை (கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை) நாகாலாந்து 
டிசம்பர் 28 - 4வது சனிக்கிழமை
டிசம்பர் 29 - ஞாயிறு  


டிசம்பர் 30 - திங்கட்கிழமை (உ கியாங் நாங் பாவை முன்னிட்டு மேகாலயாவில் வங்கி விடுமுறை
டிசம்பர் 31 - செவ்வாய்  ( மிசோரம் மற்றும் சிக்கிமில் வங்கிகள் விடுமுறை)  
அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் முழுமையாக மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொது விடுமுறை. இதன்படி டிசம்பர்  மாத விடுமுறைப் பட்டியலின்படி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களையும் சேர்த்தால், மொத்தம் 17 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் வங்கிகள் விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் சேவைகள் தடையின்றி செயல்படும் எனவும் அறிவித்துள்ளன.  
வங்கியின் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் நீங்கள் நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதே போல் விடுமுறை நாட்களிலும் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.  ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது போன்ற வசதிகளையும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!