undefined

பகீர்... இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, ரூ.2 லட்சத்திற்கு விபச்சாரத்திற்கு விற்பனை!

 

வங்கதேசத்தை சேர்ந்த 24 வயது பெண்ணை பலாத்காரம் செய்து ரூ.2 லட்சத்துக்கு விபச்சாரத்திற்கு விற்ற பெண் உள்பட 2 பேரை நவி மும்பை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது போலீசார் பலாத்கார வழக்குகளை பதிவு செய்துள்ளனர். நவி மும்பையில் உள்ள நெருல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் நிலேஷ் பூலே கூறுகையில், பாதிக்கப்பட்டவர் வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சில முகவர்கள் ஏமாற்றினர். இந்தியா வந்த பிறகு ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சிலர் மும்பை கிராண்ட் ரோட்டில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.

பாதிக்கப்பட்ட பெண் பின்னர் அழைத்து சென்று, "2 குற்றவாளிகளுக்கு ரூ. 2 லட்சத்திற்கு விற்றுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நெருலைச் சேர்ந்த அமீர் ஆசம் (27) மற்றும் ஷைபாலி இஹாங்கீர் முல்லா (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா