undefined

வங்கதேச உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடியாக கைது.. நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்றதால் நடவடிக்கை!

 

வங்கதேச உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஷம்சுதீன் சவுத்ரி மாணிக், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில், 30 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நாளில், நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள அடபோர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்கில் அவரது பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் வங்கதேசம் திரும்பும் போதெல்லாம் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சியில் ஷாகிப் அல் ஹசன் எம்.பி.யாக இருந்தவர். ஷாகிப்பைத் தவிர, பிரதமர் ஷேக் ஹசீனா, ரபீகுல் இஸ்லாம் மற்றும் கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் மற்றும் தனியார் துறை விவகாரங்களுக்கான முன்னாள் பிரதமரின் ஆலோசகர் சல்மான் எஃப் ரஹ்மான் ஆகியோர் படகு மூலம் டாக்காவை விட்டு வெளியேற முயன்ற போது முதலில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமியற்றுபவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளும் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹசன் மஹ்மூத், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் திபு மோனி, இடது தொழிலாளர் கட்சியின் தலைவர் ரஷித் கான் மேனன் மற்றும் பல உயர் ராணுவ அதிகாரிகள் அடங்குவர்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை