undefined

10% மேல் வெளிநாட்டு ஊழியர்களை பணியில்  அமர்த்த தடை ... கனடா அரசு திடீர் உத்தரவு!

 

 
 
படித்து முடித்ததும் வெளிநாடு போய் வேலை பார்ப்பது அங்கேயே செட்டில் ஆவது தான் தற்போதைய ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டில்  வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பாக கனடா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று அங்கே செட்டில் ஆவது என்பது இனி கடினமானதாக இருக்கலாம். வெளிநாட்டவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து வந்த கனடா    தங்களுடைய தற்காலிக வெளிநாட்டு வேலை ஆட்களுக்கான திட்டத்தில்  மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

கனடாவை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.  இதன் மூலம் தகுதி வாய்ந்த கனடா நாட்டவர்கள் குறிப்பிட்ட பணிக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.  
நவம்பர் 8ம் தேதியிலிருந்து வெளிநாட்டை சேர்ந்த தற்காலின ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான ஊதியம் என்பது 5 டாலர்கள் முதல் 8 டாலர்களுக்கு உள்ளாக இருக்க வேண்டும். இதனையடுத்து  கனடாவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக ஊதியத்தை தர வேண்டியதிருக்கும். எனவே அவர்கள் உள்நாட்டு ஊழியர்களுக்கே முன்னுரிமை வழங்குவார்கள். கனடாவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள், இந்த Temporary Foreign Worker Program திட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி கனடாவை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதால் கனடா  அரசு திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது.   அதே நேரத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை கன்னட அரசு அதிகரித்துள்ளது. எனவே கனடாவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் முதலில் கனடா நாட்டவருக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும். இந்த புதிய மாற்றம்  குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் மற்றும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் என பிரிக்கப்படுகிறது. இதன் மூலம்  அதிகம் பாதிக்கப்பட போவது குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யக்கூடிய வெளிநாட்டவர்கள் தான்.


தற்போது நிறுவனங்கள் கனடா நாட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதால் அங்கே குறைந்த ஊதியத்தில் பணிபுரியும்   வெளிநாட்டவர்கள்  சொந்த நாட்டிற்கே திரும்ப வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை நிறுவனங்களே செய்து தர வேண்டும் என கனடா அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  குறிப்பிட்ட நிறுவனம் தங்களுடைய மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்திற்கு மேல் வெளிநாட்டு ஊழியர்களை நியமனம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!