undefined

மணப்பெண் அலங்காரம், புடவை, சீர்வரிசைத் தட்டுடன் நாய்க்கு வளைகாப்பு.. நெகிழ்ச்சி... !

 

10 மாதம் சுமந்து பெற்ற தாயையும், தூக்கி வளர்த்த தாயையுமே வைத்து பராமரிக்க யோசிக்கும் இந்த காலகட்டத்தில் நாய்க்கு சீர்வரிசை தட்டு வைத்து வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார் விவசாயி ஒருவர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி  கூறாக்களப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்  நாராயணன். இவர் விவசாயத்துடன்  கூலித் தொழிலும் செய்து வருகிறார்.

 தனது வீட்டில் செல்லப் பிள்ளையாக நாய் ஒன்றை வளர்த்து வரும் நிலையில்  தற்போது அந்த நாய் கர்ப்பம் அடைந்துள்ளது.   நாய் மீது அதிக அன்பு வைத்திருக்கும்  நாராயணன், தனது நாய்க்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டார். இதனையடுத்து வளைகாப்பு நிகழ்வுக்காக   பத்திரிக்கை அடித்து  சொந்த பந்தம் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார்.  

வளைகாப்புக்காக  நாயை மணப்பெண் போல அலங்கரித்து அதற்கு புடவை கட்டி ஒன்பது தட்டில் சீர்வரிசை, நலங்கு  என  வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்பட்டது.  கூலித்தொழில் செய்து வரும் விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு   வளைகாப்பு நடத்திய நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் பெரும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க