விடிந்தால் வளைகாப்பு.. பெற்றோரை அழைத்துச் செல்ல வந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்!
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்த தனுஷ் என்ற 21 வயது இளைஞர் டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த 28 வயதான காவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இவர்களது திருமணத்தை பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். தற்போது காவ்யா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு தனுஷ் தனது மனைவியுடன் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு காவ்யாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். பெற்றோரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு காவ்யாவின் பெற்றோர் சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு ஒருமுறை கூட வந்ததில்லை. இந்நிலையில் காவ்யா தனது வளைகாப்புக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன்படி பெற்றோர்களும் காவ்யாவிடம் வளைகாப்புக்கு வருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சேலத்தில் காவ்யாவுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையில் காவ்யாவின் பெற்றோரும் சேலத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கினர். பின்னர் மகளுக்கு போன் செய்து சேலம் வந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருமணம் முடிந்து காவ்யாவின் பெற்றோர் முதன்முறையாக சேலம் வந்துள்ளதால், காவ்யா தனது கணவரிடம் நேரில் சென்று பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இரவாகிவிட்டாலும் காதல் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக காவ்யாவை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார் தனுஷ். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றனர். சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலம் தரையிறங்கும் இடத்தில் காவ்யா திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் காவ்யாவின் துப்பட்டா சிக்கி கீழே விழுந்துள்ளார். இதில் காவ்யாவுக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவ்யாவின் உடலை பார்த்து காவ்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி மகளின் வளைகாப்புக்கு வந்திருந்த இடத்தில் அவர்கள் கதறி அழுதது காண்போரையும் கலங்க வைத்தது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!