சடலமாக மீட்கப்பட்ட பெண் குழந்தை... போலீசார் தீவிர விசாரணை!

 

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் சாக்கடையில் பச்சிளம் பெண் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முறை தவறிய உறவில் குழந்தைப் பெற்றெடுப்பதும் அதிகரித்து வருகிறது.

விடுதியின் பாத்ரூமில் குழந்தைப் பெற்றெடுத்த திருமணமாகாத இளம்பெண், கேரளத்தில் திருமணமாகாத மகளின் குழந்தையை 5வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற தாய் என்று அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில், சாக்கடையில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பெத்தானியாபுரம் குடியிருப்பு அருகே செபாஸ்டியன் நகர் தேவாலயம் உள்ளது. அதன் எதிரே உள்ள வாய்க்காலில் புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கரிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த குழந்தையின் உடலை மீட்டு 108 ஆம்புலன்சில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடையில் பெண் குழந்தை கிடப்பதாகவும்  காலை 10 மணிக்கு மேல் அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் விவரம், சமீபத்தில் பிரசவம் ஆன பெண்களின் விவரம் குறித்து கரிமேடு போலீஸார் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!