வீட்டில் ஆயுதபூஜை, விஜயதசமி  வழிபாடு செய்ய உகந்த நேரம்...!! 

 

சரஸ்வதி பூஜைக்கு முதல் நாளே குழந்தைகளின் பாடப்புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றை ஒரு பலகையில் வைத்து மஞ்சள் துணியால் பாதி மூடியபடி போர்த்திவிட வேண்டும்.
வீடு, அலுவலகம், தொழில்சாலைகளின்  முகப்பில் வாழைக்கன்றுகள், மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும். சரஸ்வதி பூஜை  தினத்தில்  காலையில் சரஸ்வதி படத்தை அலங்கரித்து, விளக்கேற்றி பூஜை முறைகளை செய்ய வேண்டும். வெண்ணெய், பால், தயிர், பாகுவெல்லம், தேன், மோதகம், வடை, கதம்ப சாதம் இவைகளில் ஏதாவது  ஒன்றை தயார் செய்து படைக்கலாம்.  அம்பிகைக்கு   உகந்த மலர்களான செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரையில் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், புத்தகங்களுக்கும் அணிவிக்க  வேண்டும். அந்த வகையில் நடப்பாண்டில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை  அக்டோபர் 23 ம் தேதி திங்கட்கிழமையும், விஜயதசமி  அக்டோபர் 24 ம் தேதி செவ்வாய்கிழமையும் கொண்டாடப்பட உள்ளது.

பூஜை செய்ய உகந்த நேரம்:


ஆயுதங்களுக்கு பூஜை செய்வதற்குரிய முகூர்த்த நேரமாக அக்டோபர் 23 ம் தேதி பகல் 02.18 முதல் 03.04 வரை கணிக்கப்பட்டுள்ளது.  தசரா எனப்படும் விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக அக்டோபர் 24 ம் தேதி மாலை 05.22 முதல் 06.59 வரையிலான நேரம் கணிக்கப்பட்டுள்ளது.


காலையில் எழுந்து வீடு சுத்தம் செய்து வாசல் மற்றும் பூஜை அறையில் மாக்கோலம் இட வேண்டும். வீட்டை தோரணங்களாலும், பூஜை அறையை மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.பூஜை அறையில் நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரை கோலமிட வேண்டும்.

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?!
தாமரையின் நடுவில் ஓம் என்றும் எல்லா இதழ்களிலும், ஐம் என்றும் எழுத வேண்டும். கோலத்தில் நடுவில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் அகல் விளக்குகளும் ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைகள் நல்லபடியாக அமைய முழுமுதற்கடவுளாம் விநாயகரை வணங்கி குலதெய்வத்தை மனதார பிரார்த்திக்க வேண்டும்.

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?!
சரஸ்வதி ஸ்லோகங்கள், நாமாவளிகள், பாடல்கள், அம்பிகை துதிகள், பாடல்கள் பாடலாம். நைவேத்தியமாக பால் கற்கண்டு சாதம் , இனிப்பு வகைகள் செய்யலாம். பாசிப்பருப்பு சுண்டல் செய்வது கூடுதல் சிறப்பு. இயன்ற அளவு சுமங்கலிகளுக்கு சந்தனக்கலர் ரவிக்கை துணிகள் , மஞ்சள், குங்குமம், மங்கலப்பொருட்கள் வழங்கலாம். ஆரத்தி எடுத்து தீபத்தை பூஜையறையில் சேர்த்து நிறைவு செய்யலாம்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!