undefined

ஆகஸ்ட் 29 வேளாங்கண்ணி திருவிழா.. சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிப்பு!

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாகைக்கு வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும், வெளி மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயிலும், சென்னை செண்ட்ரலில் இருந்து சிறப்பு ரயிலும் பக்தர்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் வருடம் தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வருடமும் ஆகஸ்ட் 29ம் தேதி வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், திருவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இப்போது முதலே வேளாங்கண்ணியில் குவிய துவங்கி உள்ளனர். 

இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், நலனை முன்னிட்டும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மும்பை மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இதனால் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.


மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து வேளாங்கண்ணிக்கு இம்மாதம் ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7 ம் தேதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மறு மார்க்கத்தில் நாளை ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 9  தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.  அதே போன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் நாகை வேளாகண்ணிக்கு கூடுதலாக திருவிழா நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா