ஜூன் 20 தான்  கடைசி... மாற்றுத்திறனாளிகள்  உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க  மறந்திடாதீங்க!  

 

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.2000 பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து வாழ்நாள் சான்று வழங்கப்படுகிறது. 2024-2025ஆம் நிதியாண்டு தொடங்கியுள்ளதால், மாவட்ட பொதுப்பணித் துறை நல அலுவலகம் மூலம் மாதந்தோறும் ரூ.2000 பெற்று வரும் பயனாளிகள், இந்த ஆண்டுக்கான பராமரிப்பு உதவித் தொகையைத் தடையின்றி தொடர்ந்து பெற, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து வாழ்நாள் சான்றிதழ் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகத்தில் 2024 ஜூன்  இறுதிக்குள் சமர்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளர்து.

மேலும் இது நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ (வாழ்க்கைச் சான்றிதழ்) கொடுக்கப்படலாம். சமர்ப்பிக்கும் போது, ​​ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தேசிய அடையாள அட்டை நகல், மருத்துவ சான்றிதழ் நகல், யுடிஐடி கார்டு நகல், தற்போதைய பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண் மற்றும் உதவித்தொகையின் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் கலந்து கொள்ள இயலாதவர்கள் மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வலகம், திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரிக்கு ஆவணங்களை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் தா.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!