undefined

பிரபல வங்கியில் நுழைந்து கொள்ளை முயற்சி..  காட்டிக்கொடுத்த அலாரம்.. குற்றவாளியை மடக்கி பிடித்த போலீசார்!

 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பைபாஸ் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கிளையில் செங்குன்றம் மற்றும் பாடியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை வங்கி கிளையில் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் லாக்கரை கொள்ளையடிக்க முயன்றார்.வங்கிக் கிளையின் அலாரம் ஒலித்ததையடுத்து, வங்கிக் கிளை மேலாளர் வீட்டில் இருந்து செங்குன்றம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த செங்குன்றம் போலீஸார், வங்கிக் கிளையில் கொள்ளையடிக்க முயன்ற ஆவடி அருகே உள்ள வீராபுரம், ஓம் சக்தி நகரைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவரை மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சுரேஷை கைது செய்தனர். இந்த கொள்ளை முயற்சியின் போது, ​​வங்கிக் கிளையின் அலாரம் அடித்ததால், வாடிக்கையாளர்களின் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் தப்பியது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!