undefined

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்.. மர்ம நபர்கள் கை வரிசை!

 

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பாட்டில்கள்  வீசி சென்றதால் பரபரப்பு. சென்னை தியாகராயர் நகர் செவாவியார் சிவாஜி கணேசன் சாலையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில்  கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்தின் வளாகத்தில் முன்பக்க வாயிலில் 6 க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாம்பலம் காவல் துறையினர் முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி சென்ற நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி சி டி வி காட்சிகளின் அடிப்படையில் போலிஸார் பாட்டில் வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!