undefined

அரவிந்த் கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு.. பரபரப்பான சூழலில் அடுத்த முதல்வர் யார்?

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றிரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 10 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து டெல்லிக்கு புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாட்கள் காவலில் வைக்க அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது.

இதையடுத்து அவரை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி அமைப்பார் என ஆம் ஆத்மி கட்சி கூறினாலும், அது சாத்தியமில்லை என சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டபோது செய்தது போல் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார், இருப்பினும் டெல்லி ஆளுநர் இதற்கு சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜெயிலில் இருந்து ஒருவர் முதல்வராக ஆட்சி செய்வது கடினம் என்றும், இந்தியாவில் இதுவரை இப்படி நடந்ததில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்