undefined

 விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்... திருச்செந்தூர் ஆவணித் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

 
 

தமிழகத்தில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் அரோகரா கோஷம் விண்ணதிர தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கிய நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து 7.05 மணிக்கு நிலையம் சேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானை எழுந்தருளிய பெரிய தேர், பின்னர் வள்ளி அம்மன் தனியாக எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளை சுற்றி வலம் வந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை