undefined

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய போகும் இடம்.. நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

 

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  போலீசார் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன் ஆற்காட்டில் சுரேஷ் கொலைச் சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னால் இருந்து செயல்பட்டதாகவும், எனவே அவரது சகோதரர் கூலிப்படை ஏவி அவரைக் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 8 பேர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று இறுதி அஞ்சலியுடன் தகனம் செய்யப்படுகிறது. சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவரது அடக்கம் குறித்த அவசர வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதில், அவரது மனைவி கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யும்படி முறையிட்டு இருந்தார். இதற்கு கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெருக்கடி நிறைந்த பகுதி. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் என்று அரசு தரப்பும் முன்வைத்துள்ளது. 

அதற்கு பதிலளித்த நீதிபதி பவானி சுப்பராயன், ”ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10.30 மணிக்கு விசாரிக்கிறேன் என கூறிய நிலையில், 12 மணிக்கு பதிலளிக்கிறோம் என ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு நீதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!