undefined

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை நிறைவு; அடுத்த வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்... காவல் ஆணையர் தகவல்!

 

 தமிழகத்தில்  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்துள்ளதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங்  வெட்டிக்கொலைச் செய்யப்பட்ட வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட இதுவரை  27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் இதில் தொடர்புடையவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் குறித்து அடுத்த வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தையும் விரைவில் தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை