undefined

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. வழக்கில் சிக்கிய 4 வழக்கறிஞர்களுக்கு தடை விதிப்பு!

 

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. ஹரிஹரன், அஸ்வதாமன், சிவா மற்றும் ஹரிதரன் ஆகியோர் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

வழக்கு முடியும் வரை நான்கு பேரும் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞர் சமூகத்தின் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்பதை இந்தத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சம்பவம் வழக்கறிஞர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொலை வழக்கில் வழக்கறிஞர்களே குற்றவாளிகளாக இருப்பது மிகுந்த வேதனையாக இருப்பதாக வழக்கறிஞர் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை