undefined

 காவலர் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்த ஆயுதப்படை காவலர் மரணம்!

 
 

சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்த  ஆயுதப்படை காவலர் உயிரிழந்துள்ளார்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (29). இவர், சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வந்தார்.

பராமரிப்புப் பணிக்காக புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள தண்ணீர்தொட்டியில் தண்ணீர் நிறைந்துள்ளதா? என பார்ப்பதற்காக செல்வமுருகன் நேற்று மதியம் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று பார்த்த போது அவர் கால் தவறி 14வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  செல்வமுருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில், சக காவலர் ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த  சம்பவம் அக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!