undefined

அர்ஜுன் சம்பத் மகன் நள்ளிரவில் கைது..  போலீசார் அதிரடி!

 

ஈஷா யோகா மையம் குறித்து வதந்தி பரப்பிய தனியார் வார இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ஜூன் சம்பத்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ஓம்கார் பாலாஜி மிரட்டி பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து கோவை பந்தய போலீசார் ஓம்கார் பாலாஜி மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஓம்கார் பாலாஜி  நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து இன்று காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் பேரணி நடத்த இந்து மக்கள் கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!