undefined

சேர்ந்து குடிக்கும் போது தகராறு... போதையில் நண்பனைக் கொன்று விட்டு எஸ்கேப்பான சக நண்பர்கள்!

 

நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கையில், சக நண்பர்களே ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் ஒண்டி காலனி அக்னேஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் விஜய் (29). கார் ஓட்டுநராக விஜய் வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து கல்லை எடுத்து விஜய்யின் தலையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக இறந்தார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் குன்றத்தூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், இறந்து கிடந்த விஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கொலைக்கான காரணம் மற்றும் தலைமறைவாக உள்ள கொலையாளிகள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலையாளிகள் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் அடிக்கடி குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி விட்டது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!