undefined

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு காரில் கிளம்பறீங்களா? சென்னையில் இருந்து கிளம்புபவர்கள் இதைப் ஃபாலோ பண்ணுங்க!

 
நாளை தீபாவளிக் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை முதல் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால் லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கிப் பயணப்பட்டு வருகின்றனர். ரயில்கள், பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்து வருகின்றன.

பல இடங்களிலும் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அசதியும், பயண நேரமும் அதிகரிக்கிறது. எளிதில் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களை சோர்வடையவும் செய்கிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கிச் செல்பவர்கள், குறிப்பாக கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில்  தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை கூடுமானவரை தவிர்த்து விட்டு திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லலாம். இந்த வழியே செல்லு போது வாகன நெரிசலைக் கூடுமனாவரைத் தவிர்க்கலாம். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!