தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு!

 

 தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் ஒருபுறம் வந்தவண்ணம் உள்ளன. மறுபுறம் இதனை தடுக்க தமிழக அரசு சிறப்பு தடுப்பு பிரிவின் செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் செயல்பாடுகள்  பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.  2020ல் 600கி கஞ்சா கடத்தல் வழக்கில் தஞ்சாவூர்  புதுக்கோட்டையில்   சிலர் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பரிமலதா உட்பட  பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த விசாரணையில்  நீதிபதி தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக இதுபோன்ற வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனரா? என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி  அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு அரசு வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் போதை பொருட்களை அனுப்பியது குறித்து  ஒடிசா, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த  2486 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

 இந்த அறிக்கைக்கு தற்போது நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வழக்குகளில் அதிக அக்கறை எடுத்து செயல்பட்ட தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது எனக் கூறியிருந்தது.மேலும் “NIB-CID விசாரணை அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.  போதைப்பொருள் குற்றவாளிகளை  கண்டுபிடித்து தண்டனை பெற்று தர வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.  அத்துடன் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கஞ்சா கடத்தல்காரர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!