undefined

பெரியார் விருதுக்கு டிச.20 வரைவிண்ணப்பங்கள் வரவேற்பு... கலெக்டர் அறிவிப்பு!

 

பெரியார் விருதுக்கு டிசம்பர் 20ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சமூகநீதிக்காக பாடு​படு​பவர்களை சிறப்புசெய்ய “சமூகநீ​திக்கான தந்தை பெரி​யார் விருது” 1995-ம் ஆண்டு​ முதல் வழங்​கப்​பட்டு வருகிறது. இவ்விருதைப் பெறு​வோருக்கு ரூ.5லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்​ப​தக்​க​மும், தகுதி​யுரை​யும் வழங்​கப்படும்.

இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் “சமூகநீ​திக்கான தந்தை பெரி​யார் விருது” வழங்க உரிய விரு​தாளரை தேர்ந்​தெடுக்க பரிந்​துரைகள் வரவேற்​கப்​படு​கிறது. எனவே சமூகநீதிக்காகபாடு​பட்டு பொது​மக்​களின் வாழ்க்கைத் தரத்தை மேம்​படுத்த, மேற்​கொள்​ளப்​பட்ட பணிகள் மற்றும் அதன்பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகளை உடைய​வர்கள் தங்களது விண்​ணப்​பத்தை சென்னை மாவட்ட ஆட்சி​யருக்கு அனுப்பி வைக்​கலாம்.

விண்​ணப்​பங்கள் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீ​திக்காக பாடு​பட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்​கியதாக இருத்தல் வேண்​டும். விண்​ணப்​பங்கள் வரும் டிச.20-ம் தேதிக்​குள் மாவட்ட ஆட்சி​யர் அலு​வல​கம் வந்து சேர வேண்​டும்’ என்று கூறப்​பட்​டுள்​ளது. கடந்த வருடம் பெரியார் விருது சுபவீ அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!