பைக் திருடர்களுக்கு மாலை, மரியாதை, கைத்தட்டல்!! விநோத பழக்கம்!!
பொதுவாக திருட்டு கும்பலை பிடித்தால் கட்டி வெளுத்து விடுவார்கள். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் திருடர்களை பிடித்தால் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். இதனால் அவர்கள் மீண்டும் இப்பணியை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பாட்டியலாவுக்கு அருகில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எத்தனை முறை புகார் அளித்தாலும் போலீஸார் குற்றவாளிகளைப் பிடிப்பதில்லை. இதன்பிறகு இரவில் கிராமமக்கள் கொள்ளையர்களைப் பிடிக்க ரோந்து செல்கின்றனர்.
கொள்ளையர்களைப் பிடித்து அவர்கள் தண்டிப்பதில்லை. அவர்கள் கழுத்தில் மாலை போட்டு கௌரவப்படுத்துகின்றனர். அடிக்கும் போது கொள்ளையர்கள் இறந்து விட்டால், ஏன் கொலை செய்தீர்கள் என போலீஸ் துளைத்து எடுக்கும். இதனால் பிடிபட்டவருக்கு மாலை போடுவதால், அவர் மீண்டும் திருட வரமாட்டார் என்கிறார்கள்.
பாட்டியாலாவின் ரவாஸ் பிராமண கிராமத்தில் இரு திருடர்கள் பைக் மற்றும் இரும்பு பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு திருடனை மட்டும் பிடித்தனர். திருடனை பொதுமக்கள் திட்டவோ, அடிக்கவோ இல்லை. ஆனால், அவர்கள் அந்த இடத்திலேயே அவருக்கு கழுத்தில் மாலை அணிவித்து கைதட்டி மரியாதை செய்தனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்ள் கூறுகையில்," ஷேர் மஜ்ரா கிராமத்தில் வசித்து வரும் குர்பிரீத் சிங் ஜஹ்லானுடன் மொத்தம் 16 பேர் கொண்ட திருட்டு கும்பல் உள்ளது. இவர்களின் வேலையே திருடுவதும், கொள்ளையடிப்பது தான். அப்பகுதியில், வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை இவர்கள் திருடுகின்றனர்.அத்துடன் வீட்டில் இன்வெர்ட்டர், 15 ஆயிரம் ரொக்கம், பைக், இரும்பு பொருட்களையும் திருடிச் சென்று விடுகின்றனர். இவர்களிடம் இருந்து வாகனங்களைப் பாதுகாப்பதற்கு தான் இரவு ரோந்து செல்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர். இதே போன்று ஜலந்தர் நகரின் பஸ்தி பகுதியில் பைக் திருடனை பிடித்த இளைஞர்கள் அவரது கழுத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!