undefined

 ரிஜிஸ்டர் ஆபீஸில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை... ரூ.1,30,340 பணம் பறிமுதல்.. சார்பதிவாளர் உட்பட 6 பேர் கைது!

 
 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1,30,340 லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சார் பதிவாளர் உட்பட 6 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மயில் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளும், ஊழியர்களுக்கு அனைத்து பணிகளுக்கும் தொடர்ந்து அதிகளவில் லஞ்சம் வாங்கி வருவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. அதே போன்று மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் நடத்தி வருபவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் இடைத்தரகராக பணியாற்றி பொது மக்களிடம் லஞ்சப் பணத்தை வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டது. 

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை திடீரென மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நுழைந்தனர். சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு, கதவுகளை அடைத்து விட்டு அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.30,340 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி மற்றும் புரோக்கர் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளை கைப்பற்றினர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

இந்நிலையில் இன்று நவம்பர் 8ம் தேதி மயிலம் சார் சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!