undefined

 2 மாதங்களில் 6 பேர்... வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் தவறி விழுந்து மரணம்!

 

 இன்று ஏப்ரல் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமி உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி  ஆன்மிக பயணம் மேற்கொண்ட இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். வெள்ளியங்கிரி ஏழாவது மலையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 31 வயது வீரகுமார் ஏப்ரல் 18ம் தேதி  தனது நண்பர்களுடன் கோவை வெள்ளியங்கிரி மலையில் மலை ஏறிக் கொண்டிருந்தார்.  7வது மலைக்கு சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கால் தவறி  விழுந்தார். இதில்  அவருக்கு கால், கழுத்து, வயிறு,  மார்பகம் என பல இடங்களில்  படுகாயம் ஏற்பட்டது .

படுகாயம் அடைந்த அவரை அவரது நண்பர்கள், வனத்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 5க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!