undefined

கோவையில் அண்ணாமலை 9 நாட்கள் பரப்புரை!

 

கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வரும் ஞாயிறுக்கிழமை மார்ச் 31ம் தேதி முதல் தனது தொகுதியில் பரப்புரை செய்ய உள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை முதல் தனது பரப்புரையை துவங்கும் அவர், முதலாவதாக ஸ்ரீ பெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை. தென் சென்னை ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்கிறார்.



அதன் பின்னர் சனிக்கிழமை சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி செல்கிறார். இதற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை தான் கரூர், கோயம்புத்தூர் வருகிறார்.

அதன் பின்னர் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தொடர்ச்சியாக கோயம்புத்தூரில் பரப்புரை செய்கிறார். பின்னர் மீண்டும் 6ஆம் தேதி முதல் 8ஆம்  தேதி வரை கோவையில் பரப்புரை செய்கிறார்.

இறுதியாக ஏப்ரல் 11 ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதிகளில் கோவையில் பரப்புரையை மேற்கொள்கிறார்.


கோவையில் பா.ஜ.க.விற்கு சாதகமான சூழல் இருப்பதாக அக்கட்சியினர் பெரிதும் நம்பி வருகின்றனர். ஆனால் கோவை அதிமுகவின் கோட்டையாகவே பொதுவாக பார்க்கப்படுகின்றது. 

கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சியிலிருக்கும் CPI-M வெற்றி பெற்று வந்தது. இம்முறை கோவை பாராளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக நேரடியாக மோதுகின்றனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சியும் மோதுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்