இன்று தஞ்சை பெரிய கோவிலில் அன்னாபிஷேகம்... லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
இன்று தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம். பல ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட அன்னாபிஷேகத்தைக் காண தஞ்சையில் குவிந்துள்ளனர். பெரிய சிவனும், நந்தியுமாக அமைந்திருக்கிற தஞ்சையில் மூட்டை மூட்டையாக அரிசியில் சாதத்தை சமைத்து அன்னாபிஷேகம் செய்யப்படுவது காண கண்கொள்ளாக் காட்சி. பொதுவாக வருடத்தில் வரும் எல்லா மாத பௌர்ணமி தினங்களுமே சிறப்பு வாய்ந்தவை தான் என்றாலும் ஐப்பசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் ஐப்பசி மாதம் பகலும் இரவும் சரியாக இருக்கும் மாதம். அதனால் தான் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்கிறோம். ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதம் ஐப்பசி. இந்த ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் தான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் நீங்கப் பெற்றதாக தெரிவிக்கின்றன நம் புராணங்கள்.
ஐப்பசி மாத பௌர்ணமியில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட விரும்பிய மணவாழ்க்கை, புத்திர பாக்கியம், ஆரோக்கியம் , தீர்க்க சுமங்கலி வரம் என அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறலாம் குறிப்பாக ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் சிவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெறும்.
சிவபெருமானுக்கு சமைத்த சாதம், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும். உண்ண உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதத்தில் இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் செய்யப்படும் அன்னாபிஷேகத்தை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரியச் செய்யப்படுகிறது. தீயில் நீரும், நீரில் நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை.
ஐம்பெரும் பூதங்களையும் தன்னுள் அடக்கி கொள்ளும் அன்னம் இறுதியில் இறைவனையே சேர்கிறது. அன்னத்தின் அருமையையும், பெருமையையும் புரிந்து அன்னத்தை வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்தவே சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!