undefined

500 ரூபாய் எடுத்ததால் ஆத்திரம்.. மகனை ஊதுகுழலால் அடித்தே கொன்ற தந்தை!

 
 உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தியோதி கிராமத்தை சேர்ந்தவர் நௌஷாத். இவரது மகன் ஆட் (10). இந்நிலையில் இன்று காலை வீட்டில் வைத்திருந்த ரூ.500 காணாமல் போயுள்ளது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மகன் ஆட் மீது நெளஷாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அடுப்பு ஊதும் ஊதுகுழலால் அவரை கடுமையாக தாக்கினார்.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் ஆட்டின் தாத்தா பாட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி நௌஷாத் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மகனைத் தாக்க பயன்படுத்திய ஊதுகுழலையும் போலீசார் பறிமுதல் செய்தனர். "நௌஷாத் தனது மகனை அடிக்கடி அடித்துள்ளார். இன்று வீட்டில் பணம் காணாமல் போனபோதும் அடித்து உதைத்தார். ஆனால் அடித்ததில் கொடுமையாக இருந்ததால் அவர் உயிரிழந்தார்" என அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!