கோவிலை இடிக்க உத்தரவிட்டதால் ஆத்திரம்...கலெக்டர் அலுவலகத்தை சூறையாடிய பொதுமக்கள்!

 

சத்தீஸ்கரில் வழிபாட்டு தலத்தை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

சத்தீஸ்கர் மாநிலம் பலோடபஜார் என்ற பகுதியில் உள்ள சத்னாமி சமூகத்தினரின் வழிபாட்டு தலத்தை இடிக்க அரசு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள சத்னாமி சமூகத்தினர் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். பலோடாபஜார் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

அவர்கள் கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மீது கற்கள் மற்றும் தடிகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் கலெக்டர் அலுவலக கட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வழிபாட்டு தலத்தை சேதப்படுத்தியது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சத்னாமி சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலோடபஜார் ஆட்சியர் அலுவலகத்தில் சத்னாமி சமூகத்தினர் நடத்திய வன்முறை போராட்டத்தை சமாளிக்க ராய்ப்பூரில் இருந்து கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சம்பவங்களை மாநிலத்தில் எங்கும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று துணை முதல்வர் விஜய் சர்மா கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!